search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி மலையில் ரெயில்"

    ஊட்டி மலையில் ரெயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. #OotyTrain
    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. பழமை வாய்ந்த மலை ரெயிலை யுனஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

    இதனையொட்டி சேலம் கோட்ட ரெயில்வேத்துறை சார்பில் சுற்றுலா திரு விழாவை யொட்டி உலக பாரம்பரிய தினம் மேட்டுப்பாளையம்- குன்னூர்- ஊட்டி ரெயில் நிலையங்களில் கடந்த 16-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இதற்காக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் ஜொலிக்கிறது.

    இந்நிலையில் குன்னூர்- ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரெயில்வே அதிகாரிகள் இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க ஒரு நபர் ஒன்றுக்கு ரூ.15-ம், ஊட்டி- குன்னூர் இடையே பயணிக்க ரூ.10-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

    உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் அக்டோபர் 8-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #OotyTrain

    ×